சர்வானந்த் நிச்சயதார்த்தம் சித்தார்த்-அதிதி ராவ் ஜோடியாக வந்தனர்

ஐதராபாத்:தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி, சர்வானந்த் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருவதாக தகவல் பரவியது. இதை இருவரும் மறுக்கவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் சர்வானந்துக்கும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. ரக்‌ஷிதா ஆந்திர முன்னாள் அமைச்சர் போஜ்ஜல கோபாலகிருஷ்ணாவின் பேத்தி ஆவார். இந்த நிச்சயதார்த்த விழாவுக்கு சித்தார்த்தும் அதிதி ராவும் ஜோடியாக வந்து கலந்துகொண்டனர். இருவரும் விழாவில் ஒன்றாகவே இருந்தனர். பின்னர் ஒன்றாக ஒரே காரில் ஏறிச் சென்றனர்.

Related Stories: