சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் - கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோத உள்ளனர். அரையிறுதியில் அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதிய ஜோகோவிச் 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-4, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் கரென் கச்சனோவை (ரஷ்யா) வீழ்த்தினார்.

* ஐசிசி மகளிர் யு-19 உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. அரையிறுதியில் நியூசிலாந்து யு-19 அணியுடன் நேற்று மோதிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து யு-19 அணி 20 ஓவரில் 107/9; இந்தியா யு-19 அணி 14.2 ஓவரில் 110/2. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து நாளை நடக்கும் பைனலில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து 19.5 ஓவரில் 99 ரன் ஆல் அவுட்; ஆஸி. 18.4 ஓவரில் 96 ரன் ஆல் அவுட்.

* குரோஷியாவில் நடைபெற உள்ள ஸாகிரெப் ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்பட 8 இந்திய வீரர், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் லக்‌ஷியா சென் 21-15, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் உள்ளூர் வீரர் ஜொனாதன் கிறிஸ்டியிடம் போராடி தோற்றார்.

* வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் கிரிக்கெட் அணியின் செயல்பாட்டு ஆலோசகராக முன்னாள் கேப்டன் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

*‘சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100’ சர்வதேச டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் பிப். 12-19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: