மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன. மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அதனை கூடுதல் பொறுப்பாக மற்றொரு அதிகாரியிடம் வழங்குவதால் எந்தவித பயனும் இல்லை. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் டீன் மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும். எனவே, மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

Related Stories: