ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு திண்டல் பகுதியில் திருமண மண்டபத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக தேர்தல் நிர்வாகிகள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடந்து வருகிறது. எரோடே இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக பழனிசாமி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எனது கையெழுத்து தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக மனுவில் புகார் அளித்துள்ளனர். ஜனவரி

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மகேஷ் தினேஸ்வரி அமர்வில் பழனிசாமி தரப்பில் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்ப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக் கோரியும் முறையீடு செய்யப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னத்தை பயன்படுத்தி அனுமதி கோரி முறையிடவும் பழநிசாமு தரப்பு முடிவு செய்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிபதிகள் அறிவிறுத்தியுள்ளனர்.

Related Stories: