நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்க விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னையை அடுத்த உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளரும், பள்ளி முதல்வருமான வி.எஸ்.மகாலட்சுமி, துணைத்தலைவர்கள் எல்.நவீன் பிரசாத், எல்.அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மேட்டில்டா மார்க், நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஷ்ரம்  பள்ளியின் தலைமை ஆசிரியர் வீணா இளங்கோவன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.  

கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் துவக்கிவைத்து ,மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அரச பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பில் ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில்,

நியூ பிரின்ஸ்பள்ளி இப்பகுதியின் ஒரு சிறந்த அடையாளமாக விளங்குகின்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற பல முன்னாள் மாணவர்கள் இன்று பல்வேறு  துறைகளில் சிறந்து விளங்கி இப்பள்ளிக்குமேலும் பெருமை சேர்த்து வருகின்றனர். இப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் அரசுபொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத வெற்றியை பெற்று வருவது பாராட்டுக்குரியது. ஒருபகுதியின் வளர்ச்சி என்பது அங்குள்ள பள்ளிகளின் வளர்ச்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியின் வளர்ச்சிக்கு இப்பள்ளி பேருதவி புரிந்து வருகிறது. இன்று இப்பகுதி சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு இது போன்ற பள்ளிகளின் வளர்ச்சியும் மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நியூ பிரின்ஸ் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் அவர்கள் வாழ்வில் வெற்றி பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் சிறந்த முறையில் தொடர்ந்துசெய்து வருகிறது. அறிவியலும், கலையும் பிரிக்க முடியாத இணைந்த ஒன்றாகும்.

நம் மனதில் எழும் கலை உணர்வுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாகின்றது. மனிதகுலத்தின் வளர்ச்சி அறிவியலால் மட்டுமே சாத்தியம், மாணவர்கள் கல்வியுடன் கூடிய அறிவியல், கலை பண்பாடுகளையும் சிறந்த முறையில் கற்று சமுதாயத்திற்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்கி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்எல்ஏ க்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, மாநகராட்சி மண்டல தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜே.கே.மணிகண்டன், ஷர்மிளா தேவி திவாகர், செயலாளர் திவாகர்,  எம்.தமிழ் செல்வன், மாநிலக் கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ்.ரகு, கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாரதி, ரேமண்ட் கார்னியில், நெஸ்லின் கார்னெய்ல், சி.டி.மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: