இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசி

ராஞ்சி: இந்தியா வந்துள்ள நியூசி அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடியது.  அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களிலும் வென்று, நியூசியை ஒயிட் வாஷ் செய்தது. இந்நிலையில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் களம் காண உள்ளன. முதல் ஆட்டம் இன்று இரவு ராஞ்சியில் நடக்கிறது. நியூசி அணி, டி20 தொடரில்  மிட்செல் சான்ட்னர் தலைமையிலும்,  இந்தியா அணி  ஹர்திக் பாண்டிய தலைமையின் கீழும் விளையாட உள்ளன. ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீரர்கள் கேப்டன் ரோகித், கோஹ்லி, ஷமி, சிராஜ், நியூசி அணியில் கேப்டன் டாம் லாதம்,  நிகோலஸ், டக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

நியூசி அணியில் தனியாக பேட்ஸ்மேன்கள் என்று யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பர்கள்,  ஆல்ரவுண்டர்கள் மட்டும் இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்திய அணியில்  ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பிரித்வி ஷா 2வது டி20யில் விளையாட உள்ளார்.  கூடவே  முகேஷ் குமார், ஜிதேஷ் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த முறையும் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஆனால் ஒருநாள் தொடரை இழந்த நியூசி டி20 தொடரில் சாதிக்க  கூடுதல் வேகம் காட்டும்.

Related Stories: