டுவிட்டரை தொடர்ந்து டிரம்பின் பேஸ்புக் கணக்கு தடை நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்குக்கான தடை நீக்கப்பட்ட நிலையில், தற்போது பேஸ்புக்கின் தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் 2020ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது’ என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் முற்றுகை மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதனால், டிரம்பின் சமூக வலைதள கணக்கை பேஸ்புக், ட்விட்டர் ஆகியன தடை செய்தன.

சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பின்னர், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர் எவ்வித டுவிட்டும் செய்யவில்லை. இந்நிலையில் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்  கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் மீதான அனைத்து தடைகளும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: