சில்லி பாயின்ட்...

* 2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங் (26 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் அவர் ஒருநாள் போட்டிகளில் 18 விக்கெட், டி20 போட்டிகளில் 22 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

* கடந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்தியாவின் சூரியகுமார் யாதவ் (32 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 31 சர்வதேச டி20 போட்டியில் 1164 ரன் (சராசரி 46.56, ஸ்டிரைக் ரேட் 187.43) குவித்து இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.

* நவம்பர் 2009ல் இருந்து இந்தியா விளையாடிய 27 இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் 24ல் வென்று அசத்தியுள்ளது.

* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகம் முகமது சிராஜ் முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

* உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற காலிறுதியில் நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த ஜெர்மனி, கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல் போட்டு டிரா செய்ததுடன், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

Related Stories: