ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ் நாடு 324 ரன் குவிப்பு: சவுராஷ்டிரா 92/3

சென்னை, ஜன. 26: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 324 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சேப்பாக்கம் எம்.ஏ.சி அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று நிதானமாக பேட் செய்த தமிழ் நாடு முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்திருந்தது (90 ஓவர்). இந்திரஜித்  45, விஜய் சங்கர் 11 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்திரஜித் 66 ரன் (216 பந்து, 5 பவுண்டரி), விஜய் சங்கர் 53 ரன் (143 பந்து, 7 பவுண்டரி) எடுத்து வெளியேற, ஷாருக்கான் 50 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 324 ரன் குவித்து ஆல் அவுட்டானது (142.4 ஓவர்). சவுராஷ்டிரா தரப்பில் யுவராஜ்சிங் டோடியா 4,   தர்மேந்திர சிங் ஜடேஜா 3, சிராக் ஜானி 2 விக்கெட் அள்ளினர்.  

கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் மட்டும் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்துள்ளது (35 ஓவர்). ஹர்விக் 21, ஜெய் கோஹ்லி 25, ஷெல்டன் ஜாக்சன் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சிராக் ஜானி 14,  சேத்தன் சகாரியா 8 ரன்னுடன களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. புதுச்சேரி முன்னிலை: கேரளாவுக்கு எதிரான ரஞ்சி லீக் ஆட்டத்தில், முதல் நாள் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்திருந்தபுதுச்சேரி, 2ம் நாளான நேற்று 371 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. டோக்ரா 159, அருண் கார்த்திக் 85, ஆகாஷ் 48, ஜெய் பாண்டே 38 ரன் எடுத்தனர். அடுத்து களம் கண்ட  கேரளா 2வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்துள்ளது.சச்சின் பேபி 30,  சல்மான் நிசார் 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Related Stories: