இம்ரான் கானின் உதவியாளர் கைது: பாகிஸ்தான் போலீஸ் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஃபவாத் சவுத்ரி, ஆளும் கூட்டணி அரசை கடுமையாக சாடினார்.

அதையடுத்து அவரை இன்று பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் தேர்தல் ஆணைய செயலாளர் அளித்த புகாரின் பேரில், கோஹ்சார் காவல் நிலைய போலீசார், ஃபவாத் சவுத்ரி கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஆவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: