உலகம் அதிர்ச்சி!: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்கள் கசிவு…!! Jun 25, 2021 மெர்சிடிஸ் பென்ஸ் அட்லாண்டா தின மலர் அட்லாண்டா: சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகில் முன்னணியில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பொதுவெளியில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார், பேருந்துகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அட்லாண்டாவில் செயல்படும் தலைமையகத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் பராமரிக்கும் நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி முதல் 2017 ஜூன் வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. … The post அதிர்ச்சி!: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்கள் கசிவு…!! appeared first on Dinakaran.
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!
விலை உயர்வை கண்டித்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!
பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: நிலச்சரிவில் பலர் மாயமானதால் அதிர்ச்சி
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு: அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலி