சில்லிபாயிண்ட்

* ஐசிசி அணியில் ஹர்மன்பிரீத், மந்தனா

2022ன் ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி அணியில் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணி விவரம்: அலிஸா ஹீலி (கீப்பர்), பெத் மூனி (ஆஸி.), மந்தனா, ஹர்மன்பிரீத், ரேணுகா சிங் (இந்தியா), லாரா வுல்வார்ட், அயபோங்கா காகா, ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்ரிக்கா), நதாலி ஸைவர்,  சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), அமேலியா கெர் (நியூசிலாந்து).

* ஐசிசி டெஸ்ட் அணியில் ரிஷப்

கடந்த ஆண்டின் தலை சிறந்த வீரர்கள் அடங்கிய ஐசிசி டெஸ்ட் அணியில் இந்தியா சார்பில் ரிஷப் பன்ட் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, கிரெய்க் பிராத்வெய்ட், மார்னஸ் லாபுஷேன், பாபர் ஆஸம், ஜானி பேர்ஸ்டோ, ரிஷப் பன்ட் (கீப்பர்), பேட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா, நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஐசிசி ஒருநாள் அணி: பாபர் ஆஸம் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷாய் ஹோப், ஷ்ரேயாஸ் அய்யர், டாம் லாதம் (கீப்பர்), சிக்கந்தர் ராஸா, மெகிதி ஹசன் மிராஸ், அல்ஜாரி ஜோசப், முகமது சிராஜ், டிரென்ட் போல்ட், ஆடம் ஸம்பா.

*உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதியில் ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நேற்று போராடி வென்ற ஆஸ்திரேலியா, தொடர்ந்து 12வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

* பேஸ் டி கேஸல் அணிக்கு எதிரான லீக் 1 கால்பந்து ஆட்டத்தில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 5 கோல் போட்டு சாதனை படைத்தார்.

Related Stories: