அதிமுக ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்; அவரை நான் சந்தித்த போதெல்லாம் இதையே கூறினார்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பன்னீர்செல்வத்துடன்  வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்; புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை கூடிய விரைவில் அறிவிப்போம். ஒன்னரை கோடி தொண்டர்கள் விரும்பாத சூழ்நிலையை பழனிசாமிதான் ஏற்படுத்தியுள்ளார். அதிமுக இரட்டை இலை கிடைக்காமல் போக நான் காரணமாக இருக்க மாட்டேன். பாஜக போட்டியிட விரும்பம் தெரிவித்தால் தான் ஆதரவு என கூறினோம். அதிமுக ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்; அவரை நான் சந்தித்த போதெல்லாம் இதையே கூறினார் இவ்வாறு கூறினார்.

Related Stories: