கொலிஜியம் விவகாரம் நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொலிஜியம் விவகாரத்தில் அதிருப்தி அடைந்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை என்று விமர்சனம் செய்தார். டெல்லி வக்கீல்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று  பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதிகளாக பதவியேற்ற பிறகு அவர்கள் தேர்தலில் சந்திக்கவேண்டியதில்லை. அல்லது பொதுமக்களின் கண்காணிப்பை எதிர்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புகளையும், அவர்கள் தீர்ப்பு வழங்கும் விதத்தையும், அவர்களின் மதிப்பீடுகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சமூகவலைதள காலகட்டத்தில் எதையும் மறைக்க முடியாது. .1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று நினைப்பது தவறாகும்.  நாடாளுமன்றம்  தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: