இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்: தடைமீறி ஊர்வலம் சென்ற காங்கிரசார் 5 பேர் கைது

வாணியம்பாடி: தடைமீறி ஊர்வலம் சென்ற காங்கிரசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உருவ சிலையின் அருகே மலர் மாலை அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை யாரோ சிலர் அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அன்றைய தினம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம்பாஷா, வாணியம்பாடி முன்னாள் நகர தலைவர் கமால்பாஷா ஆகியோர் தலைமையில் நேற்று வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் மற்றும் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் ஏணியை அகற்றியவர்களை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடந்து சென்று திருப்பத்தூர் எஸ்பியிடம் நேரில் மனு அளிக்க காங்கிரசார் திட்டமிட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அஸ்லாம்பாஷா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 5 பேர் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இன்று காலை நடந்து சென்றனர். இதுபற்றி அறிந்ததும் வாணியம்பாடி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் காங்கிரசார் நடந்து செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.

Related Stories: