இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி: நிலம் வாங்குவதாக கூறி ஏமாற்றிய மேலாளர் மீது வழக்கு

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர  வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இவர், கோராடியில் வசித்து  வரும் தனது நண்பரான  தாக்கரே(37) என்பவரை மேலாளராக பணியமர்த்தி உள்ளார். இந்நிலையில் உமேஷ்யாதவ்  நிலம் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.44 லட்சத்தை தனது  வங்கிக்கணக்கில் இருந்து தாக்ரேவின் வங்கிகணக்கிற்கு பரிமாற்றம்  செய்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட மேலாளர் தாக்ரே, தனது  பெயரிலேயே அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவிற்கு தெரியவரவே, தாக்ரேவிடம் அந்த இடத்தை தனது பெயரில் மாற்றம்  செய்யக்கேட்டுள்ளார். அதற்கு தாக்ரே மறுப்பு தெரிவித்ததால்  அதற்கான ரூ.44  லட்சத்தை திருப்பி தருமாறு  யாதவ் கேட்டுள்ளார். தர மறுத்ததால் இதுகுறித்து  போலீசிடம் உமேஷ் யாதவ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் தாக்ரே மீது  நம்பிக்கை மோசடி, நில மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: