ஆஸி. ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு பிளிஸ்கோவா, பெலின்டா தகுதி

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இன்று காலை செக்குடியரசின் 30வயது கரோலினா பிளிஸ்கோவா, ரஷ்யாவின் 22வயது வர்வரா கிராச்சேவாவுடன் மோதினார்.  

இதில் ஆதிக்கம் செலுத்திய பிளிஸ்கோவா 6-4,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில், குரோஷியாவின் டோனா வெகிக் 6-2,5-2 என்ற செட் கணக்கில்,  ஸ்பெயினின் நூரியா பாரிசாஸ்-டயசை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்குள் நுழைந்தார். சீனாசின் ஜாங் ஷுவாய் 6-3,6-2 என  அமெரிக்காவின் கேட்டி வோலினெட்சையும், ஒலிம்பிக் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், 6-2,75 என  இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

6ம் நிலை வீராங்கனையான கிரீஸ்நாட்டின் மரியா சக்கரி, 6-7,6-1,4-6 என்றசெட் கணக்கில் சீனாவின் ஜூலினிடம் தோல்வி அடைந்துவெளியேறினார். பெலாரசின் விக்டோரியா அசரென்கா 1-6,6-2,6-1 என அமெரிக்காவின் மேடிசன் கீசை வென்றார்.

ஆடவர் ஒற்றையரில் 3வது சுற்றில், 7ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், 6-7, 3-6, 6-7 என  அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவிடம் தோல்வி அடைந்தார்.  ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4,6-2,6-3 என்ற செட் கணக்கில், இங்கிலாந்தின் டான் எவன்சை வீழ்த்தினார்.

Related Stories: