இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் லடாக் எல்லை சீன வீரர்களிடம் அதிபர் ஜி ஜின்பிங் உரை

பீஜிங்: இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள கிழக்கு லடாக்கின் பாங்காங்  ஏரிப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ல் நடந்த மோதலை தொடர்ந்து,  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. கிழக்கு  லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே 17 சுற்று  உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் இரு நாடுகளுக்கும்  இடையே நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய பிரச்னைகளைத் தீர்க்க  குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கிழக்கு லடாக்கின் சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடினார்.

இதனை அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங், குஞ்செராப் எல்லை பாதுகாப்பு நிலைமை குறித்து மக்கள் விடுதலை ராணுவ (பி.எல்.ஏ) வீரர்களுடன் கலந்துரையாடினார். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து கேட்டறிந்தார். எல்லை ரோந்து மற்றும் பிற மேலாண்மை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: