அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401ல் அதிவேகமாகச் சென்றது. இதில், அந்த சரக்கு வேனைப் பிடிப்பதற்காக, போலீஸ் வாகனமும் அதிவேகத்தில் சென்றது. அப்போது அந்த சரக்கு வேன் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், இதில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் தொடர்ந்து மோதியதால் பெரும் விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த கணவன், மனைவி, அவர்களுடைய பேரக்குழந்தை உட்பட 4 பேர் பலியாயினர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விபத்தில் இறந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த மணிவண்ணன்(60), அவரது மனைவி மகாலட்சுமி(55) மற்றும் பேரக்குழந்தை என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
The post கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி appeared first on Dinakaran.
