காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும், உறைபனி மற்றும் கடுமையான குளிரால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களில் 78 பேர் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது. கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 28 டிகிரிக்கும் கீழ் பதிவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக தென்படுகிறது. இந்த உறைபனியில் உறைந்து கடந்த 9 நாட்களில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
