இடைத்தேர்தல் அறிவிப்பால் ஓபிஎஸ் அணி சார்பில் ஜன.23ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையேயான பனிப்போர் என்பது தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீட்டிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கருப்பு சட்டையுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் மறைவை அடுத்து, அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக மவுனம் காத்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரும் 23ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாகவும், கட்சி ரீதியாக அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: