பஞ்சாப்பில் மாஜி காங். அமைச்சர் பாஜவில் இணைந்தார்: 4வது கட்சிக்கு தாவியவர்

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான மன்பிரீத் சிங் நேற்று பாஜவில் இணைந்தார். முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துவிட்டதாகவும், தனது கட்சி சேவைக்காக பாராட்டுவதற்கு பதிலாக இழிவுபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். டெல்லியில் பாஜ தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் மன்பிரீத் சிங் தன்னை பாஜவில் இணைத்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகனான மன்பிரீத் சிங், 1995ல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். 28 ஆண்டு கால அரசியலில் அவர் 4 கட்சிகளுக்கு தாவி உள்ளார். அகாலிதளம் கட்சியிலிருந்து விலகி சொந்த கட்சி தொடங்கிய அவர் பின்னர் 2016ல் காங்கிரசில் சேர்ந்து நிதி அமைச்சரானார். தற்போது பாஜவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: