கொரோனாவை கட்டுப்படுத்த மூலக்கூறு ஆய்வு

நன்றி குங்குமம் டாக்டர்

தற்போது தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கொரோனா பாதிப்பு இல்லை. நாம் கவனமுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது. மூலக்கூறு ஆய்வை இங்கே மேம்படுத்த வேண்டும்.

*மூலக்கூறு ஆய்வுகள் யார், யாருக்கு, எங்கிருந்து(இடம்), எத்தனை, எந்த அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன போன்ற முக்கிய புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். பொதுசுகாதார நோய்தடுப்புத்துறை இயக்குனர் சமூகத்தில், குடும்பம், குழந்தைகள்- மத்தியில் குழுக்களாக பாதிப்பு ஏற்படுதல்(Cluster), நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்ட இளம் வாலிபர்கள், இணைநோய் இல்லாமல் கொரோனாவால் இறந்தவர்கள், வெளிநாட்டுப் பயணிகள், முழுத் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மூலக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.   

*சமீபத்திய அறிவியல் ஆய்வில் நோய் அறிகுறிகள் இல்லாதவர்களும், நோயைப் பரப்புவதில்,நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் போன்றே செயல்படுவது தெரியவந்துள்ளது. எனவே, அனைவருக்கும் பரிசோதித்தால் மட்டுமே நோய் அறிகுறிகள் இல்லாமல் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இருக்கிறார்களா எனக் கண்டறிய முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

*இந்தியாவில் தற்போது பரவலாக உள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்-BA.2.12.1ல் L452Q மாற்றம் இருப்பதால் அது BA2 ஓமிக்ரானை விட 30% அதிகம் பரவும் தன்மை கொண்டது என்பதும், தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் செய்தி வெளியாகியுள்ளது. சென்னை IITயில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கும் அறிகுறிகள் அதிகம் இல்லை. பாதிக்கப்பட்ட அனைவரும் முழுத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி குறித்து ஆய்வுகள் தேவை.

*தாவ் பிரிதேஷ் சேத்தி எனும் டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர் மூலக்கூறு ஆய்வுகளின் முடிவுகளை பயன்படுத்தி ஸ்டிரெய்ன் புளோ-Natural Language Understanding (NLU)மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா வைரஸை 36 பரிமாணங்களாக வகைப்படுத்தி, அவற்றில் சில வைரஸ் விரைந்து பரவ வழிவகுக்கிறது எனக் கண்டறிந்து ஸ்டிரெய்ன் புளோ(Strainflow model)மாதிரியை நாமும் நடைமுறைப்படுத்தினால் கொரோனா உருமாற்ற பாதிப்பை 2 மாதங்களுக்கு முன்னரே கணிக்க இயலும்(எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை துல்லியமாக அது காட்டாமல் போனாலும், எப்போது பாதிப்பு அதிகரிக்கும்(Surge)என பெரும்பாலும் கணிக்க இயலும்.

*வெளி மாநிலத்தவரை எல்லையிலும்,தொடர் வண்டியில் வருபவர்களையும், அறிகுறிகள் வைத்து மட்டுமே கண்காணிப்பது, சொற்ப அறிகுறிகள் உள்ளவர்களை/அறிகுறிகள் இல்லாதவர்களை/அறிகுறிகள் தாமதமாக பின்னர் வருபவர்களை- கண்டுபிடிக்கப்படாமல் போகும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என இருக்க, அதை களைய நடவடிக்கைகள் தேவை. குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு Random பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

*தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளாவில் ஒமிக்ரான் கலவையின் பாதிப்பு (ஓமிக்ரான் XE) உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிலரிடம் மூலக்கூறு ஆய்வு செய்ததில் உருமாற்றம் அடைந்த கொரோனா BA.2.12(52%),BA.2.10(11%) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர BA.2.12.1 டெல்லியில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. (இவை புதுவகை உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள்)

*ஒமிக்ரானில் தற்போது 9 வகை கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய புது வகை ஒமிக்ரான், ஓமிக்ரான் 2 ஐ விட 23-27% அதிகம் பரவும் தன்மைகொண்டது என்பது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக,விரைவில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா இந்தியாவில் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுவகை உருமாற்றம் பெற்ற கொரோனா (ஒமிக்ரான் XE, BA.2.12.இதுவரை கண்டறியப்படவில்லை.

*சோதனை மாதிரிகள் முறையாக சேகரிக்கப்பட்டு,உரிய பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு அனுப்பாவிடில் மாதிரிகள் கெட்டுப்போய் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

*மூலக்கூறு ஆய்வு+ நோய் கண்காணிப்பு இரண்டையும் அதிகப்படுத்த வேண்டும்; எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகிறதோ, தொடர்ந்து நோய்ப் பாதிப்பு அதிகமாகிறதோ, இறப்பு+மருத்துவமனை சேர்க்கை அதிகமாகிறதோ, TPR(test positivity rate- 100பேருக்கு பரிசோதனை செய்தால் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகிறது என்ற எண்ணிக்கை)அதிகமாகிறதோ அங்கெல்லாம் கூடுதல் கவனத்துடன் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

*ஒமிக்ரான் BA.1ல் 33 மாற்றங்களும்,BA.2ல் 29 மாற்றங்களும் கொரோனா ஸ்பைக் புரதத்தில் உள்ளதால், அவை உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியின் பாதிப்பிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்கின்றன என அமெரிக்க ஹுஸ்டன் பல்கலைக்கழக மூலக்கூறு ஆய்வாளர் மரு.ஜிம்மி கோலிகர் ஆதாரத்துடன் அறிவியல் ஆய்விதழில் கட்டுரை வெளியிட்டு அதை தீர்க்க புதிய வகை மருந்துகளும், தடுப்பூசிகளும் தேவை என வலியுறுத்தியுள்ளது. புழக்கத்தில் தற்போதுள்ள கொரோனா தடுப்பூசியில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு கொரோனா தடுப்பூசியில் மாற்றம் செய்வது குறித்தான ஆய்வுகள் இந்தியாவில்/தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொகுப்பு: எஸ்.கே.ஞானதேசிகன்

Related Stories: