ஜம்மு, காஷ்மீரில் பனிச்சரிவு 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை விமான போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருப்பினும் விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டாரில் உள்ள கிராமத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. ஆனால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து  பந்திபோரா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்திற்கு அதிக பனிச்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அனந்த்நாக், குல்காம் , ரஜோரி மாவட்டங்களில் 2,000 மீட்டருக்கு மேல்  பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: