பாகிஸ்தானில் இந்திய சேனல்களை ஒளிபரப்பியோர் மீது நடவடிக்கை

லாகூர்: பாகிஸ்தான் முழுவதும் இந்திய சேனல்களை ஒளிபரப்புவதற்கு கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சில கேபிள் ஆபரேட்டர்கள் இந்திய சேனல்கள், உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து எலக்ட்ரானிக் ஊடக ஓழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் 4 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்திய சேனல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பியது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: