ஆதரவாளர்கள் வன்முறைக்கு இடையே பிரேசில் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

ஓர்லெண்டோ: பிரேசில் நாட்டில் நடந்த தேர்தலில் அதிபர் ஜெர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இதையடுத்து முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். இந்நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். மேலும் போல்சனேரோ ஆதரவாளர்கள் 1500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவரது ஆதரவாளர்கள் பிரேசிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முன்னாள் அதிபர் போல்சனேரோ அமெரிக்காவின் ஒர்லெண்டோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்சனேரோவின் உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: