ஸ்ரீ ரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்: வைகுண்ட ஏகாதசியையொட்டி வையாளி உற்சவம்..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற வையாளி உற்ச்சவத்தில் திரளானவர்கள் பங்கேற்று நம்பெருமாளை வழிபட்டனர். ஏகாதசி விழாவின் ராப்பத்து நிகழ்வின் 8ம் நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகே உள்ள மணல்வெளி பகுதிக்கு அழைத்து சென்ற பாதந்தாங்கிகள் அனைத்து திசைகளிலும் கொண்டு சென்று மக்களின் தீவினைகளை வேட்டையாடுவது போல பாவனை செய்த வையாளி உற்சவத்தை அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இதை அடுத்து கொள்ளையில் ஈடுபட்ட திருமங்கை மன்னன் நம்பெருமாளிடமே கொள்ளை அடித்ததை உணர்ந்து சரணாகதி அடையும் வேடுப்பெறி வைபவமும் அரங்கேறியது. பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு 2 டன் எடையுள்ள மலர்களால் புஸ்பார்ச்சனை நடத்தப்பட்டது ஏராளமானோர் தரிசித்தனர். 

Related Stories: