தோல்வியை ஏற்க முன்னாள் அதிபர் மறுப்பு பிரேசிலில் வரலாறு காணாத வன்முறை: நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அதிபர் மாளிகை நொறுக்கப்பட்டது

ரியோ டி ஜெனிரோ: அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்ததால் பிரேசிலில் வரலாறு காணாத வன்முறை வெடித்தது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அதிபர் மாளிகை நொறுக்கப்பட்டது. பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக அதிபர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். அதிபர் போல்சனேரோ தோல்வி அடைந்தார். ஆனால் மின்னணு எந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி போல்சனேரோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து சில்வா வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இதையடுத்து மிகவும் தாமதாக லுலா கடந்த 1ம் தேதி பதவி ஏற்றார். இதில் கலந்து கொள்ளாத போல்சனேரோ உடனடியாக புளோரிடா சென்று விட்டார். மேலும் தேர்தல் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளார்கள் தற்போது  நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் வளாகத்திற்குள் நுழைந்து  போல்சனேரோ ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு பயங்கர வன்முறை வெடித்துள்ளது.

அறை, ஜன்னல்களை அவர்கள் அடித்து உடைப்பததுடன் தற்போதைய அதிபர் லுலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி னர். இதனால்  பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணுவம் தலையிட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி உள்ளது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: