மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அம்பேத்கர் சட்ட பல்கலையில் தேர்தல் விழிப்புணர்வு போட்டி: 480 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2023ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் 480 மாணவர்கள் முதற்கட்ட தேர்வில் கலந்து கொண்டனர்.  அதிலிருந்து 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டது.  தேர்வு செய்யப்பட்ட அணிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000  மூன்றாம் பரிசாக ரூ.3,000, ஆறுதல் பரிசாக மூன்று அணிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது. ேபாட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் அமித்,  பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தலைவர் பாலாஜி, ஆராய்ச்சி மற்றும் பதிப்பகத்துறை இயக்குநர் பேராசிரியர் ஹரிதா தேவி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப் பேராசிரியர்  ஆர்த்தி ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்)  குலாம் ஜீலானி பாபா மற்றும்  சென்னை மாநகராட்சி உதவிக் கல்வி அலுவலர் முனியன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: