வடஇந்தியாவில் கடுங்குளிர்: வீட்டில் முடங்கிய மக்கள்

புதுடெல்லி: வடஇந்தியா முழுவதும் கடுங்குளிர், மூடுபனி வாட்டி வருகிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகக்குறைந்தபட்ச வெப்பநிலை ஆகும். வாட்டி எடுக்கும் குளிரை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

பனி சூழ்ந்த இமயமலையில் இருந்து மிகக் குளிர்ந்த காற்று தலைநகரம் வழியே வீசுவதால் மக்கள் குளிரில் உறைந்து போய் உள்ளனர்.  இதேபோல் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. மூடுபனி காரணமாக 12 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.  கடும் குளிர் நிலவுவதால் ராஜஸ்தான், டெல்லிக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: