கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணு பாதிப்பு: எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுவின் தரம் பாதிக்கப்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹானில் முதன் முதலில் பரவிய கொரோனா உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கியூரியஸ் மருத்துவ அறிவியல் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெல்லி, பாட்னா, ஆந்திரா, மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். 19 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களின் விந்தணுக்களை ஆய்வு செய்தனர். அதில், தொற்று ஏற்பட்ட உடன் முதல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு சேகரிக்கப்பட்ட விந்துவில் கொரோனா வைரஸ் இல்லை என்றாலும், விந்தணுக்களின் வடிவம், விந்தணுவின் இயக்கம் என்ற 3 முக்கிய காரணி பாதிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. மேலும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள்,விந்தணு வங்கிகள் போன்றவை கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணு தரத்தை சோதிப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: