நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதிகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதிகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக பகுதியில் ஏற்கனவே பன்றி காய்ச்சலானது கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய வனப்பகுதியில் உள்ள பன்றிகள் திடீரென உயிரிழந்தது. மதுமலையில் இதுவரை 20க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்த நிலையில் அதன் உடல் மாதிரிகள் புனே மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பன்றிகளின் உடல் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து பன்றிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் பல யுக்திகளை கையாண்டுள்ளனர். முதுமலையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதியாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: