5ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை: பூ மார்க்கெட் செயல்படும்

அண்ணா நகர்: வணிகர் சங்க மாநாடு வரும் 5ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதில் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் காய்கறி மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுக்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்ககங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் 5ம் தேதி அன்று வழங்கம் போல் கோயம்பேடு பூ மார்க்கெட் செயல்படும் என்றும் கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், வரும் 5ம் தேதி கோயம்பேடு பூ மார்க்கெட் விடுமுறை அளிக்கப்படவில்லை. வழக்கம் போல் பூ மார்க்கெட் இயங்கும் எனவும் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு பூக்களை வாங்கி செல்லலாம்’ என்றார்.

The post 5ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை: பூ மார்க்கெட் செயல்படும் appeared first on Dinakaran.

Related Stories: