வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி


புதுச்சேரி: புதுவையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ஏடிஎம் வைக்கப்பட்டுள்ள ஏசி அறையில் போதை ஆசாமி படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இரு நாட்களாக புதுவையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் புதுவை வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வீடுகள், ரூம்களில் முடங்கி உள்ளனர். பகலில் மட்டுமில்லாமல் இரவில் கூட வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் நகரப்பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் போதை ஆசாமி ஒருவர், வெப்ப தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்கள், ஏடிஎம் உள்ள சென்றபோது உள்ள போதை ஆசாமி தூங்கிகொண்டிருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு தங்குமிடம் இல்லாததால், ரயில் நிலையத்திலிருந்த ஏடிஎம்மில் தூங்கியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: