ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா கதீமுக்கு நாடு திரும்பக் கூடாது என்று எச்சரிக்கை

கஜகஸ்தான்: ஹிஜாப் அணியாமல் சர்வதேச சதுரங்க போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை நாடு திரும்பக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டை சேர்ந்த இளம் சதுரங்க வீராங்கனை சாரா கதீம் கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் பங்கேற்றார். போட்டியின் போது சாரா ஹிஜாப் அணியவில்லை. இதற்கு ஈரானில் உள்ள பல்வேறு பழமைவாத இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

சாராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலர் போட்டி முடித்து அவர் நாடு திரும்ப கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள சாராவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மிரட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் திரும்பக்கூடாது என்று சாராவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் சாரா கஜகஸ்தானில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்று விட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனைக்கு அந்நாட்டில் இருந்தே மிரட்டல் விடப்பட்டு  இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Stories: