தன்னிச்சையாக மாற்றுகிறது எல்லை ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

வியன்னா: எல்லை விவகாரத்தில் இந்தியா உடனான ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். அரசுமுறை பயணமாக சைப்ரஸ் சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், இந்தியா, சீனா எல்லை பிரச்னை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ``இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ராணுவத்தினரை குவிக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எல்லை விவகாரத்தில் இந்தியா உடனான ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை. அவர்கள் வீரர்களை குவிப்பதால் பதிலுக்கு இந்தியாவும் ராணுவப் பலத்தை நிபிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. சீனா தன்னிச்சையாக எல்லைக் கோட்டை மாற்றி அமைக்க முயற்சிக்கிறது  முதலில் யார் எல்லை மீறியது? முதலில் படைகளை அனுப்பிய நாடு எது என்பது உள்ளிட்ட விவரங்கள் பற்றி சரியான ஆவணப்பதிவு உள்ளது ’’ என்று பதிலடி கொடுத்தார்.

* ஐரோப்பா 6 மடங்கு அதிக எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ``தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.52.39 லட்சம் வருமானம் உடைய ஐரோப்பிய நாடுகள் தங்களது மக்களை குறித்து கவலைப்படுகின்றன. இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக மட்டுமே உள்ளது. ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்க தொடங்கிய பிறகு இந்தியா அதிகளவில் வாங்குகிறது. இருப்பினும், கடந்தாண்டு பிப்ரவரி முதல், ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை விட 6 மடங்கு அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது,’’ என்று பதிலளித்தார்.

Related Stories: