வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்: அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியவரும், தென்னிந்தியாவின்  ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவருமான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த  நாள், இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்’ என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: