கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வலியுறுத்தல்: அறிக்கையை 'ஏர் சுவிதா 'இணையத்தில் பதிவேற்றவேண்டும் என ஒன்றிய அரசு அறிவிப்பு..!!

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. பயணத்தை தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைத்தளத்தில் பதிவேற்ற 6 நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் ஏர் சுவிதா வலைத்தளங்களில் கொரோனா  பாதிப்பின்மை சான்றிதழை தாமாக பதிவேற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தை பயணிகள் வழங்கவும்.

பயணஅனுமதிச்சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழை பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா என்பதை விமான நிலையங்கள் உறுதிசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து விமானநிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.   

Related Stories: