“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு

டெல்லி : தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதில் இருந்து நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், 2014 முதல் 2024 வரையிலான பாஜக அரசு சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்கள் உட்பட மக்களவையில் 427 மசோதாக்களையும் மாநிலங்களவையில் 365 மசோதாக்களையும் நிறைவேற்றியதாகவும் ஆனால் மாணவர்கள் நலன் கருதி தேசிய தேர்வு முகாமைக்கு சட்டப்பூர்வ ஆதரவு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தேசிய தேர்வு முகமை குடியிருப்பு சங்கங்களை போன்று செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதில் இருந்து நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் நம்பிக்கை வைத்துள்ள மாணவர்கள், தங்களது வாழ்க்கையை சிதைத்து கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post “தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: