இந்திய கிரிக்கெட் அணி மறுஆய்வுக் கூட்டம்; ரோகித் சர்மா, டிராவிட்டுடன் நாளை ரோஜர்பின்னி, ஜெய்ஷா ஆலோசனை: லட்சுமணனுக்கும் அழைப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஷாப்பிங் மோட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை இந்திய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மதிப்பாய்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. மும்பையில் நாளை பிற்பகல் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் வங்கதேசத்தில் நடந்த ஒரு நாள் தொடரின் தோல்விகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் லட்சுமணன், தேர்வு குழு தலைவர் சேத்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். ஆனால் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி அழைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. வரும் செவ்வாய்க்கிழமை இலங்கையுடன் முதல் டி.20 போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துடன் ஏற்பட்ட தோல்வி பெரிய அவமானமாக இல்லை என்றாலும், அடுத்த 10 மாதத்தில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் தர வரிசையில் 7வது இடத்தில் உள்ள வங்கதேசத்துடன் தோல்வியை சந்தித்தது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் 2013ம் ஆண்டுக்கு பின் இந்தியா ஐசிசி தொடர்களில் பட்டம் வென்றதில்லை. தோல்விகளுக்கான காரணங்களை ஆராயும் அதே வேளையில் எதிர்காலத்திற்கான திட்டம் பற்றியும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வரத் தவறிய தோல்வி குறித்தும் விவாதிக்கலாம். 2024ம் ஆண்டு டி.20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றியும் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Related Stories: