ஜனவரி 10ம் தேதி வரை பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பால  சென்சார் கருவியில் டிச. 23 அதிகாலை ரெட் அலர்ட் ஒலித்தது. இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்சார் கருவி செயல்பாடுகளை கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் கடந்த டிச. 24ல் ஆய்வு செய்தனர்.அதன் முடிவுகளை லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது பாம்பன் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: