ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம்; அவரது கணவர் கைது..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அவரது கணவர் பிரகாஷ்குமார் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடிகை ரியா குமாரியை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக கணவர் தகவல் தெரிவித்திருந்தார். ரியா குமாரி கணவர் பிரகாஷ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி ரியா குமாரியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பிரகாஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: