நேபாளம், உத்தரகாண்ட், அந்தமானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளம், உத்தரகாண்ட், அந்தமானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பாக்லுங்கில் நேற்றிரவு இரண்டு வெவ்வேறு இடங்களில் 4.7 ரிக்டர், 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்தியாவின் உத்தரகண்டிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் இன்று அதிகாலை 2.19 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இங்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்த நிலையில், இதுவரை பாதிப்புகள் குறித்த தகவல்கள் இல்லை.

Related Stories: