வன்முறையை தூண்ட டிரம்ப் சதி செய்தது உறுதி: நாடாளுமன்ற அறிக்கை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த அதிபர் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையை தூண்ட முன்னாள் அதிபர் டிரம்ப் சதி செய்ததாக நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றார். இதனை அங்கீகரிப்பதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் இழுபறிக்கு பிறகு 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றத்தின் கேபிடால் கட்டிடத்தில் நடந்தது. அப்போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் அருகே நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இதனால் டிரம்ப் வன்முறையை தூண்ட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை விசாரிக்க ``நாடாளுமன்ற ஜனவரி 6 குழு’’ அமைக்கப்பட்டது. இந்த குழுவானது 18 மாத தீவிர விசாரணைக்கு பிறகு 814 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடந்த போது கேபிடால் கட்டிட வன்முறையை தூண்ட பல வழிகளிலும் டிரம்ப் சதி செய்தது தெளிவாக உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: