நேபாள சிறையில் விடுதலையான சோப்ராஜ் பிரான்சுக்கு நாடு கடத்தல்

காத்மாண்டு: உலகையே உலுக்கிய பல கொலைகளை செய்த சர்வதேச குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையானார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் சோப்ராஜ் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலைகளை செய்துள்ளார். இந்தியா, நேபாளத்தில் கொலை, கொள்ளை குற்றங்களில் தொடர்புடைய இவர், வெவ்வேறு நாடுகளுக்கு தப்பியோடினார். அவர் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1975ம் ஆண்டு அமெரிக்க பெண் கொலை  வழக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டு சோப்ராஜை நேபாள காவல்துறை கைது செய்தது. நேபாள நீதிமன்றம் சார்லசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதில் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சார்லஸ் சோப்ராஜ் தன் முதுமையைக் காரணம் காட்டி விடுதலை கோரியிருந்தார். இந்நிலையில், நேபாள உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததோடு 15 நாட்களுக்குள் நாடு கடத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில் சார்லஸ் சோப்ராஜ் நேற்று சிறையில் இருந்து விடுதலை ஆனார்.நேபாள நாட்டு விதியின்படி  75 சதவீத சிறை தண்டனை அனுபவித்து, சிறைவாசத்தில் நன்னடத்தை இருப்பது உறுதியானால் விடுதலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. காத்மாண்டு மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆன சில மணி நேரங்களிலேயே அவர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Related Stories: