கொச்சி துறைமுகத்தில், கடலில் மிதந்து சென்ற 12 படகுகள் கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்ததால் வெள்ளத்தில் மிதந்து சென்றன

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் மீனவர்கள் 12 படகுகள் திடீரென கடலில் மிதந்து சென்றதால் பரபரப்பு நிலவியது, கொச்சி துறைமுகம் அருகே வைப்பின் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் 12 மீன் பிடி படகுகளை கயிற்றின் முலம் கட்டிவைத்திருந்தனர். இந்தநிலையில் கயிறுகள் திடீரென அவிழ்த்து 12 படகுகளும் கடலில் மிதந்தன. சுற்றுலா படகுகள் கப்பல்கள் செல்ல கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் அவை சென்றதை கண்டு அங்கு இருந்த மீனவர்கள் மற்றும் மக்கள்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பெயரில் நவீன மீட்பு படகுகள் உடன் சம்பவ இடத்திற்க்கு விரைத்து வந்த மீட்பு படையினர்கள் 12 படகுகளையும் ஒருங்கிணைத்து கரைக்கு இழுத்து வந்து பத்திரமாக சேர்த்தனர், இதன் முலம் படகுகள் பிற கப்பல்கள் மீது மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: