ஆப்கானிஸ்தானின் 15 வயது அல்லா முகமது உள்பட ஐபிஎல் தொடரில் களமிறங்க காத்திருக்கும் இளம் காளைகள்

மும்பை: ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது. 405 வீரர்களில், 273 பேர் இந்தியர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள், இதில் நான்கு பேர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள். கேப் செய்யப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை 119, கேப் செய்யப்படாத வீரர்கள் 282, அசோசியேட் நாடுகளில் இருந்து 4 பேர் உள்ளனர்.  ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் திரளான இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் உரிமையாளர்களைக் கவர்ந்த சில இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களைப்பற்றிய தகவல்கள்: இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் ஏலம் எடுக்கப்படும் இளம் வீரர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 15 வயதுள்ள அல்லா முகமது கசன்பர் ஆவார்.

வலது கை ஆப் ஸ்பின்னரான இவர்,  காபூலில் நடந்த ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கின் 3 டி20 போட்டிகளில் 4/15 உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுபோல் அரியானாவை சேர்ந்த தினேஷ் பானா இந்த ஆண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வெல்வதற்கு தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை விளாசினார், மேலும் அந்த போட்டியில்தான் பனா ஹார்ட்-ஹிட்டர் என்று புகழ் பெற்றார். 5 போட்டிகளில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி உள்ளார். இருப்பினும், அதன்பிறகு, பானா கவனிக்கத்தக்க எதையும் செய்யவில்லை. அவர் 8 டி20  போட்டிகளில் 110 ஸ்ட்ரைக் ரேட்டில் 14 சராசரியாக இருந்தார்.

பீகார் அணியில் வலது கை வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர் சாகிப் ஹுசைன். 18 வயதான இவர் தனது இரண்டாவது ஸ்மாட் டி20 (SMAT T20) போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதுபோல் ஹுசைன் மைதானத்திற்கு வெளியே பந்தை அடிக்கவும் முடியும் என்பதும் அறியப்பட்டுள்ளது. சாகிப் ஹுசைனுக்கு சிறந்த எதிர்கால வாய்ப்பு இருப்பதாக உரிமையாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில், ஜார்கண்டின் குமார் குஷாக்ரா, 250க்கும் அதிகமான ரன்கள் அடித்து, முதல் தர வரலாற்றில் இளம் பேட்டர் என்ற சாதனையை முறியடித்தார். விக்கெட் கீப்பிங் பேட்டர் என்பதால் குமார் குஷாக்ரா, ஐபிஎல் ஏலத்தில் ஈர்க்கப்படும் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவை சேர்ந்த ஷேக் ரஷீத். வலதுகை பேட்ஸ்மேனான இவர் அற்புதமான திறமைசாலி. ரஷீத் தனது ரஞ்சி கோப்பையை பிப்ரவரி 2022ல் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அக்டோபரில் அறிமுகமானார். 3 டி20 ஆட்டங்களில் சராசரி 28 வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷேக் ரஷீத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: