தமிழ்நாடு காவல்துறையின் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளின் தரவுகளை ஆராய்ந்து ஒப்பிட்டு அடையாளம் காணப்படாத 19 பேர் உடல்களை அடையாளம் கண்டுள்ளார். மேலும் குற்ற ஆவணங்களை ஆராய்ந்து, பல்வேறு இடங்களில் காணாமல் போன 16 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார். தலைமை காவலர் தங்கமலர் மதியை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories: