3 வகையான கிரிக்கெட்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற 17வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்!

சட்டோகிராம்: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மொத்தம் 8 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். மேலும் ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற 17வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 404ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து 271 ரன்கள் முன்னிலை கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்து வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

2வது இன்னிங்சில் வங்கதேச அணி 324 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் 3 விக்கெட்டுகளும், சிராஜ், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன்மூலம்  ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற 17வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார்.

Related Stories: