நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

வெலிங்டன்: கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். 32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர் தலைமையில் இதுவரை நியூசிலாந்து அணி 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 22 வெற்றிகள், 8 டிரா, 10 தோல்விகள் பெற்றிருந்தது.

இருப்பினும், கடந்த சில இறுதிப்போட்டி தோல்வியால் எழுந்த விமர்சனம் மற்றும் பணிச்சுமை காரணமாக டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகினார். மேலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் சவுதி அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய கேன் வில்லியம்சன்; டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.

என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம் மற்றும் அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். கேப்டனாக இருப்பது அதிக வேலைப்பளுவுடன் களத்திற்கு வெளியேயும், எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவெடுப்பதற்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். நியூசிலாந்து வாரியத்துடனான உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளுக்கு தொடர்ந்து கேப்டனாக வைத்திருப்பது விரும்பத்தக்கது என்று நாங்கள் உணர்ந்தோம், ”என்று கூறினார்.

Related Stories: